இதுதான் பதிலடி போட்டியா ? இங்கிலாந்து அணியை அடித்து தொம்சம் செய்த இந்திய அணியின் வெற்றி விவரம் இதோ ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நேற்று இரவு முதல் தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா முதல் மூன்று ஓவர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால் எதிர்பாராத வகையில் விக்கெட்டை இழந்தார்.

பின்பு வழக்கம் போல இஷான் கிஷான் வெறும் 8 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 26 மற்றும் 3 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதேபோல விளையாடினால் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துவிடுமா?

பின்பு விளையாடிய தீபக் ஹூடா, ஹர்டிக் பாண்டிய, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தை விளையாடினார்கள். அதனால் தான் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடிக்க முடிந்தது.

அதில் ரோஹித் சர்மா 24, இஷான் கிஷான் 8, தீபக் ஹூடா 33, சூரியகுமார் யாதவ் 39, ஹர்டிக் பாண்டிய 51, அக்சர் பட்டேல் 17, தினேஷ் கார்த்திக் 11, ஹர்ஷல் பட்டேல் 3 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், நம்பிக்கை நாயகன் மற்றும் கேப்டனான ஜோஸ் பட்லர் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். பின்னர் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணியால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை.

இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 148 ரன்களை அடித்துள்ளனர். அதில் ஜேசன் ராய் 4, ஜோஸ் பட்லர் 0, டேவிட் மலன் 21, லிவிங்ஸ்டன் 0, ஹார்ரி புரூக் 28, மொயின் அலி 36, சாம் கரன் 4, கிறிஸ் ஜோர்டான் 26, டிமல் மில்ஸ் 7 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

இதனால் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முதல் போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here