இந்திய அணியில் இவர் தான் பெஸ்ட் டி20 பவுலர் ; இவரை ஏன் உலகக்கோப்பை போட்டியில் எடுக்கவில்லை ; பிரசாத் பேட்டி ; முழு விவரம் இதோ ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. அதுவும் இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வருண் சக்ரவத்தி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, அக்சர் பட்டேல், ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த முறை பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய வீரர்கள் ஆன தவான், யுஸ்வேந்திர சஹால், போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது பலருக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது. இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய அணியின் தேர்வாளர் பிரசாத் அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிஞ்சு இவர் தான் பெஸ்ட் பவுலர் என்று கூறியுள்ளார்.

யார் அந்த பவுலர் ??

சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் தான் அது. சஹால் தான் இந்திய அணியின் சிறந்த பவுலர், அதுமட்டுமின்றி அவர் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக தான் பவுலிங் செய்து வருகிறார். ஆனால் எப்படி இவர் ராகுல் சஹாரிடம் ஒப்பிட்டு பேச முடியும் ? என்று கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவர் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தான் விளையாடி வருகிறார். அதில் சஹால் ஒருபோதும் விராட்கோலியை கோவப்பட வைத்ததே இல்லை.

அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அரம்பித்துள்ள ஐபிஎல் 2021 போட்டிகளில் பெரிய அளவில் விக்கெட்டை எடுக்கவில்லை. அதனால் இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும்… !! கிரிக்கெட் ரசிகர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த முறை இந்திய அணியில் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரரான மற்றும் கேப்டனான மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.