ஐபிஎல் 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை 48 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்னும் மீதம் 12 போட்டிகள் மட்டுமே உள்ளனர். அதன்பின்னர், ப்ளே – ஆஃப் சுற்று தொடங்கிவிடும். இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டும் தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்னும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்க மும்பை, பஞ்சாப், பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகள் போராடி வருகின்றனர். ஆனால் எந்த அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்று தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் டி-20 2021 போட்டிகள் தொடங்கிய மாதத்தில் கொல்கத்தா அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.
ஆனால் இப்பொழுது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கியுள்ளார் வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 193 ரன்களை விளாசியுள்ளார். எல்ல போட்டிகளில் குறைந்தபட்சமாக 30க்கு மேற்பட்ட ரன்களை அடித்து வருகிறார்.
இவரை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ; வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, செய்து நேரங்களில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் ஐயர். அதனால் இந்திய அணிக்கு தேவைப்படும் ஆல் – ரவுண்டர் ஆக இவர் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பவுலிங்கில் சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை, ஆனால் இப்பொழுது அவர் வீசும் பந்துகள் யாக்கர் வீசி கொண்டு வருகிறார், அதனை பேட்ஸ்மேன்களால் சரியாக அடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். ஆனால் இப்பொழுது இந்திய அணியில் பல ஆல் -ரவுண்டர்கள் உள்ளனர் (ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹார்டிக் பாண்டிய).
வெறும் ஒரு ஐபிஎல் சீசன் வைத்து ஒரு வீரரின் திறமையை பற்றி தெரிந்து கொள்ள முடியாது..! வருகின்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. அதாவது ஐபிஎல் முடிந்த இரண்டு நாட்களில் ஆரம்பிக்க உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.