நேற்று இரவு அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 47வது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.


சிஎஸ்கே அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக இல்லை. ஆனால் 10வது ஓவருக்கு பிறகு அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 189 ரன்களை அடித்தனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்களை ஆட்டம் இழக்காமல் அடித்தார். பின்பு 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் பேட்டிங் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
17.3 ஓவர் முடிவில் 190 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றி புள்ளிப்பட்டியளில் 6வது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி. இந்த போட்டி நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் சாம் கரன் வீசிய பந்தை பேட்ஸ்மேன் பிலிப்ஸ் அடிக்க முயன்ற வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.


Well 😂 glenn phillips got no chill….. Footage Courtesy @DisneyPlusHS pic.twitter.com/cjfzZobACg
— Parth.vyas22 (@PVyas22) October 2, 2021
16வது ஓவரில் சாம் கரன் வீசிய பந்தை டெல்லி அணி பிலிப்ஸ் வீரர் எதிர்கொண்டார். அப்பொழுது பந்து எதிர்பாராத விதமாக பேட்ஸ்மேன்-னை விட்டு வெகுதூரம் போனது. அதனை பிடிக்க தோனி சென்றார். ஆனால் பேட்ஸ்மேன் பிலிப்ஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் அந்த பந்தையும் விரட்டிக் கொண்டு ஓடினார். அதனை பார்த்த தோனி சற்று பிரமித்து போனார், அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.
தோல்வியை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போராடி வருகின்றனர். இதுவரை ஒரு முறை மட்டுமே கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ??