என்னை விட… இவர் தான் டெத் பவுலர் கிங்…! ; இவர் தான் Mass- ஆ பந்து விசுவார்… ; டிரென்ட் போல்ட்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். இதுவரை 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஆறாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் உள்ளது.

சமீபத்தில் நியூஸிலாந்து அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன டிரென்ட் பெல்ட் அளித்த பேட்டியில் ; மிகச்சிறந்த டெத் பவுலர் பற்றி அவரது கருத்தை கூறியுள்ளார். அதில் என்னை விட பும்ரா தான் டெத் பவுலர் கிங் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த போட்டியை பற்றி பேசிய அவர், பும்ரா ஒரு மிகச்சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. அவர் பந்து எப்படி யாருக்கு எந்த நேரத்தில் எப்படி வீச வேண்டும் என்று நன்கு தெரியும் அவருக்கு. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் எனக்கு சுலபமாக ஆகிவிட்டது.

என்னை பொறுத்தவரை அவர் தான் உலக கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று கூறியுள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பெல்ட். இது மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

டிரென்ட் பெல்ட் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 26.2 ஓவர் பந்து வீசியுள்ளார். அதில் 8 விக்கெட்டை கைப்பற்றி 223 ரன்களை கொடுத்துள்ளார். அதாவது ஒரு ஓவருக்கு 8.46 ரன்கள் என்ற விகிதத்தில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.