இந்திய அணியில் அட்டகாசமான இளம் வீரரை வைத்துக்கொண்டு ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதே இல்லை ; இந்திய வீரரை ஆதரித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்;

இந்திய அணியில் இப்படி பட்ட அருமையான பேட்ஸ்மேன் இருக்கும்போது ஏன் வாய்ப்பு மட்டும் கொடுப்பதில்லை ? இந்திய வீரருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட்.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட அதிக வீரர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் சரியான வாய்ப்பு வழங்ப்படுகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. இருப்பினும் இந்திய அணியில் அவ்வப்போது இளம் வீரருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது.

வருகின்ற 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் மாற்றம் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இளம் வீரரான ரவி பிஷோனி -க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவாரா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

கடந்த ஐபிஎல் டி-20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர், சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டியிலும் அடித்து தொம்சம் செய்தார் ருதுராஜ்.

அது போக ஒருநாள் போட்டிக்கான விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக வழிநடத்தினார். அதில் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதம் அடித்துள்ளார் ருதுராஜ். ஆனால் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதனை பற்றி பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் கூறுகையில் ; இனிவரும் வரும் காலங்களில் நிச்சியமாக ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெறுவார். அவர் ஒரு திறமையான வீரர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்போது நான் கூறினேன், இவர் (ருதுராஜ்) சர்வதேச போட்டிகளில் விளையாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று.

திறமை இருந்தும் நீண்ட நாட்களாக இந்திய அணியில் விளையாடவில்லை என்றால், அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அனைத்து போட்டிகளில் ருதுராஜ் அவரது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே வருகிறார் என்று கூறியுள்ளார் சல்மான் பட்.

உலகக்கோப்பை போட்டிக்கு நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை, அதுவும் ப்ளேயிங் 11ல் வாய்ப்பே கொடுப்பதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

வருகின்ற 6ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆவது ருதுராஜ் கெய்வாட் -க்கு வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ன செய்ய போகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!