இவருடைய ஆட்டத்தை பற்றி நன்கு தெரிந்தது ; அதனால் அடுத்த ஆண்டு நிச்சியமாக பாசிட்டிவ் தான் ; பிளெம்மிங் ஓபன் டாக் ;

0

IPL 2022: ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 68 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு பிறகு ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது. இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை. ஏனென்றால் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதனால் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் சென்னை அணியில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது தான் உண்மை.

CSK 2022 அணியில் ஏற்பட்ட குழப்பங்கள்:

ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இதுவரை (2021) ஆண்டு வரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. ஆனால் 40 வயதான தோனி எப்பொழுது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக வாய்ப்புகள் உள்ளது.

அதனை மனதில் கொண்டு இந்த ஆண்டு ஐபிஎல் 2022 தொடங்கும் சில தினங்களுக்கு முன்பு சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை அறிவித்தது சென்னை அணி. ஆனால் ஜடேஜா தலைமையிலான சென்னை அணி முதல் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 1 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

பின்னர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார் மகேந்திர சிங் தோனி. பின்னர் அம்பதி ராயுடு , நான் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ஓய்வு எடுக்க போவதாக அவரே அறிவித்தார். பின்னர், அது இல்லை ராயுடு நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று சென்னை அணி நிர்வாகம் உறுதியாக கூறியுள்ளனர்.

பிளெம்மிங் ஓபன் டாக் :

சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் கூறுகையில் ; ” இந்த ஆண்டு இரு புதிய அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. இதனால் பல இளம் வீரர்களுக்கு நிச்சியமாக வாய்ப்புகள் என்றும் கிடைக்கும். அதுமட்டுமின்றி ராயுடு எடுத்த அந்த முடிவு சென்னை அணியை எந்த வகையிலும் பாதிக்காது.”

“அதுமட்டுமின்றி, இந்த முறை சென்னை அணியில் அறிமுகம் ஆன வேகப்பந்து வீச்சாளர் பாத்திரனா சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் அறிமுகம் ஆகியுள்ள முக்கியமான வீரராக தான் தெரிகிறது.”

“”நிச்சியமாக இவரது பங்களிப்பு அடுத்த ஆண்டு போட்டிகளில் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் பிளெம்மிங்.” இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி எந்த காரணத்தால் ஐபிஎல் 2022 ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது ?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. கீழே உள்ள COMMENTS பக்கத்தில் மறக்காமல் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here