வெறித்தனமான பேட்டிங் தான் வெற்றிக்கு முக்கியமான காரணம் ; ஆனால் அடுத்த போட்டியில்..! ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக்;

0

இன்று நியூஸிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் இரண்டாவது டி-20 போட்டியில் மோதின.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதனால் முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 191 ரன்களை அடித்தது இந்திய. அதில் இஷான் கிஷான் 36, ரிஷாப் பண்ட் 6, சூர்யகுமார் யாதவ் 111*, ஷ்ரேயாஸ் ஐயர் 13, ஹர்டிக் பாண்டிய 13, புவனேஸ்வர் குமார் 1* ரன்களை அடித்துள்ளனர். பின்பு 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி, ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.

தொடக்க வீரரான பின் ஆலன் எந்த ரன்களையும் அடிக்காமல் விக்கெட்டை இழந்தது நியூஸிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது. ஆனால் கேப்டனான கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த காரணத்தால் 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 126 ரன்களை மட்டுமே அடித்தது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

இதில் பின் ஆலன் 0, டேவன் கான்வே 25, கேன் வில்லியம்சன் 61, க்ளென் பிலிப்ஸ் 12 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் நியூஸிலாந்து அணி வென்றால் தொடர் டிராவில் முடிந்துவிடும். ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி வென்றால் தொடரையும் இந்திய வென்றுவிடும். என்ன நடக்க போகிறது ?

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ; “இதை விட ஒரு சிறந்த போட்டி நிச்சியமாக இருக்காது. அதுமட்டுமின்றி சூர்யகுமார் யாதவின் விளையாட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய போட்டியில் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது, குறிப்பாக மிடில் ஓவரில். அனைத்து பந்திலும் விக்கெட்டை கைப்பற்றுவது முக்கியமில்லை, ஆனால் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் வென்றதிற்கு பவுலர்களுக்கு தான் பாராட்டுகள்.”

“நான் அதிகப்படியான போட்டிகளில் பவுலிங் செய்து வருகிறேன், அதேபோல தான் இனிவரும் போட்டிகளிலும் பவுலிங் செய்ய வேண்டுமென்று தான் நினைக்கிறேன். எப்பொழுது பவுலர்களை வைத்து மட்டும் விளையாட முடியாது, நிச்சியமாக சிறந்த பேட்ஸ்மேன்களும் தேவைப்படுகின்றன. அதுமட்டுமின்றி, விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் சந்தோசமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று தான் நினைக்கிறேன். ஒரு வீரர் வெற்றிபெற்றால் அதனை அனைத்து வீரர்களும் மகிழ்வித்து வந்துள்ளனர். அடுத்த போட்டியில் (மூன்றாவது டி-20) எந்தவிதமான மாற்றமும் இருக்காது. நான் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டுமென்று தான் நினைத்தேன். ஆனால் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் அது கடினம் தான் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here