இனிமேல் சுப்மன் கில்-க்கு வாய்ப்பு சிரமம் தான் ; சதம் அடித்த இளம் வீரர் ; இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம் :

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் மற்றும் பார்ட்னெர்ஷிப் தொடர்ச்சியாக அமையாத காரணத்தால் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர்.

அதனால் 64.3 ஓவர் முடிவில் வெறும் 150 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் ப்ரத்வாய்ட்20, அலிக் அதனேஸ் 47 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அட்டகாசமாக பேட்டிங் செய்து வருகின்றனர். தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சதம் அடித்துள்ளனர்.

இதுவரை 113 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட்டை இழந்த நிலையில் 312 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 162 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட முன்னிலையில் இருக்கிறது இந்திய.

நம்பிக்கை நாயகனை ஓரங்கட்டிய இளம் வீரர் :

கடந்த சில மாதங்களாவே இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் சுப்மன் கில். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார். இருப்பினும் ஐபிஎல் 2023 போட்டியில் அட்டகாசமாக விளையாடிய காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ளார் ஜெய்ஸ்வால்.

வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஜெய்ஸ்வால் 350 பந்தில் 143 ரன்களை விக்கெட்டை இழக்காமல் விளையாடி வருகிறார். அருமையாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இனிவரும் போட்டிகளிலும் நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.