விராட் இல்லை ; ரிச்சர்ட்ஸ், சச்சின்-க்கு பிறகு இந்த நூற்றாண்டில் இவர் தான் கில்லி ; கபில் தேவ் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இலங்கை அணியை வென்றுள்ளது இந்திய.

kapil Dev

அதில் மூன்றாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பங்களிப்பு பேசும்பொருளாக மாறியிருக்கிறது. ஆமாம், அதில் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ராகுல் திரிபதி மற்றும் அக்சர் பட்டேல் பேட்டிங் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவ் 51 பந்தில் 112* ரன்களை அட்டமிழக்காமல் அடித்துள்ளார். அதில் 9 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். அதனால் இந்திய கிரிக்கெட் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடிக்க முடிந்தது.

பின்பு 230 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டை இழந்த இலங்கை அணியால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் அதிபட்சமாக 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

சூரியகுமார் அடித்த சதம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. இதனை பற்றி பல வீரர்களை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் கேப்டனான கபில் தேவ் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் “சில நேரங்களில் சூர்யகுமார் யாதவ் அடித்த அடிக்கு என்னால் எதுவும் பேசவே முடியவில்லை. நாம் அனைவரும் ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி போன்ற பெரிய வீரர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் அதில் சேர்க்கும் அளவிற்கு யோசனை வரும். இந்திய வீரர்களுக்கு திறமையில் பஞ்சமே கிடையாது. சூர்யகுமார் யாதவ் பவுலர்கள் வீசும் பந்து அனைத்தையும் அடிக்க தொடங்கிவிட்டார். அதனால் பவுலர்களுக்கு கடினமாக சூழல் ஏற்பட்டது.”

“நான் பெரிய வீரர்களான டிவில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களின் விளையாட்டை பார்த்துள்ளேன். ஆனால் அதில் சிலர் மட்டும் தான் சூர்யகுமார் யாதவை போல தெளிவாக விளையாடுவது. அதனால் சூரியகுமார் யதாவிற்கு வாழ்த்துக்கள். இது போன்ற வீரர்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒருத்தர், அதுவும் இவர் தான் என்று பெருமையாக கூறியுள்ளார் கபில் தேவ்.”

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் சூர்யகுமாரின் விளையாட்டு எப்படி இருந்தது ? மற்ற வீரர்களை காட்டிலும் சூர்யகுமாரின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்ற ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here