ஒருவழியாக ஷனாக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, மூன்றாவது டி-20போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வெறித்தனமாக இருந்ததுதான் உண்மை.
அப்படி என்ன நடந்தது ? மூன்றாவது போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். தொடக்க வீரரான இஷான் கிஷான் 1 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் சுப்மன் கில், ராகுல் திரிபதி போன்ற வீரர்கள் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்தனர். அதுமட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 228 ரன்களை அடித்தனர். அதில் சுப்மன் கில் 46, திரிபதி 35, சூர்யகுமார் யாதவ் 112* போன்ற வீரர்கள் ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. ஆமாம், தொடக்கத்தில் இருந்து மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதனால் 16.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இலங்கை அணியால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது. இதில் இலங்கை அணிக்கு எதிரான இந்த டி-20 போட்டிக்கான தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆன ராகுல் திரிபதி -சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தது மட்டுமின்றி, பார்ட்னெர்ஷிப் செய்து கொண்டு வந்த சூர்யகுமார் யதாவிற்கும் ஆதரவாக இருந்தார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “எனக்கு தெரிந்து சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். அவரது விளையாட்டை பார்த்தால் பேட்டிங் மிகவும் சுலபமான விஷயம் போல தான் இருக்கிறது. நான் மட்டும் அவருக்கு பவுலிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சியமாக நான் மனதை விட்டுவிடுவேன்.”
“குறிப்பாக இந்த மூன்றாவது போட்டியில் ராகுல் திரிபதி-ன் விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. அவரது அணுகுமுறை உண்மையிலும் சிறப்பாக தான் இருந்த காரணத்தால் தான் சூர்யகுமார் யாதவ் இதை (சதம்) செய்துள்ளார். அதுமட்டுமின்றி, யாரும் சூர்யாவிற்கு சொல்ல வேண்டியதே இல்லை. அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும். அதுமட்டுமின்றி, அக்சர் பட்டேல் அணியில் இடம்பெற்று விளையாடி வருவது பெருமையாக இருக்கிறது. ஆமாம், அக்சர் பேட்டிங் உண்மையிலும் சிறப்பாக இருந்தது.”
“நான் கேப்டனாக இருக்கும்பட்சத்தில் நான் எப்பொழுதும் சக வீரர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”