இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளார்.
அதனை அடுத்து நாளை மதியம் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
இதில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும், இலங்கை அணியின் கேப்டனாக ஷனாகவும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணியின் அணுகுமுறை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து யார் யார் ப்ளேயிங் 11ல் விளையாடுவார்கள் என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
உத்தேச அணியின் விவரம் : இந்த முறை கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறாத காரணத்தால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் தான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாட வாய்ப்புகள் இருக்கிறது.
தொடக்க வீரர்கள் : ரோஹித் சர்மா, இஷான் கிஷான் (சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் 200க்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார். அதனால் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் தான் பார்ட்னெர்ஷிப் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது)
மிடில் ஆர்டர் : விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர்
ஆல் – ரவுண்டர் : ஹர்டிக் பாண்டிய, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்
பவுலர்கள் : அர்ஷதீப் சிங், முகமத் சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்கள் ப்ளேயிங் 11ல் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஓருநாள் போட்டிகளில் வெல்லுமா ? இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?