இந்த பையனுடைய பவுலிங் உண்மையிலும் வேற லெவல் ; கபில் தேவ் புகழாரம் ; யார் அந்த வீரர் தெரியுமா ?

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இதுவரை வெற்றிகரமாக எந்த தடங்களும் இல்லாமல் 32 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி புள்ளிபட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது ஆர்ச்சரியமாக தான் உள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து வார்னரை வெளியேற்றினார்கள்.

அதனால் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது தான் உண்மை. இப்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் கேன் வில்லியம்சன். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில் மூன்று போட்டியில் தோல்வியையும், மூன்று போட்டியிலும் வெற்றியையும் கைப்பற்றியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி.

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் ஆர்மபித்த நேரத்தில் இருந்து சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் மாலிக் பற்றி பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது பவுலிங் மற்ற பவுலர்களை விட அதிகவேக உள்ளது என்பது மாற்றுக்கருத்தில்லை.

அதேபோல, இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் ஜம்பவான் கபில் தேவ் சமீபத்தில் உமர் மாலிக் பவுலிங்கை பற்றி பேசியுள்ளார். அதில் ” பவுலிங் என்று வந்தால் அதில் Pace முக்கியமில்லை. ஒரு பவுலர் ஒரே மாதிரியாக சரியான இடத்தில் தொடர்ந்து பவுலிங் செய்ய வேண்டும்.”

“ஒரு போட்டியில் சரியாக செய்தால் பத்தாது, அதனை மீண்டும் மீண்டும் அனைத்து போட்டிகளிலும் செய்ய வேண்டும். அதனை சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் பவுலர் உமர் மாலிக் செய்து வருகிறார். எனக்கு தெரிந்து அதுவே மிகப்பெரிய சாதனை தான்.”

இந்திய அணியின் முன்பு வேகப்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது மிகவும் அரிது தான். ஆனால் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் அறிமுகம் ஆன பிறகு பல இளம் வீரர்கள் அவரவர் திறமையை வெளிப்படுத்தி கொண்டு வருகின்றனர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் கட்டமைப்பு மிகவும் அருமையாக மாறியுள்ளது. ஐபிஎல் போட்டிகளால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் கபில் தேவ்.