வீடியோ ; பா..! ஸ்டம்பை தெறிக்க விட்ட CSK பவுலர் முகேஷ் சவுத்திரி ..! வைரலாகும் வீடியோ இதோ ;

0

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய 33வது போட்டி மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற தொடங்கியது. இதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் மொத்தம் 32 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில் சென்னை அணி 13 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளும் வென்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் முதலில் வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்ததது மும்பை அணி. 10 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 56 ரன்களை அடித்துள்ளனர்.அதில் ரோஹித் சர்மா 0, இஷான் கிஷன் 0, ப்ரேவிவ்ஸ் 4,சூர்யகுமார் யாதவ் 32 ரன்களை அடித்துள்ளனர்.

இதற்கிடையில், முதல் ஓவரில் பவுலிங் செய்தார் சென்னை அணியின் புதிய வீரரான முகேஷ் சவுத்திரி. அதனை இறுதி நேரத்தில் இஷான் கிஷான் எதிர்கொண்டார். அப்பொழுது, இஷான் கிஷான் பந்தை அடிக்க முயன்றார். ஆனால் அது எதிர்பாராத விதமாக ஸ்டம்ப்பை தெறிக்க விட்டது தான் உண்மை.

அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் தொடங்கிய முதல் போட்டியில் இருந்து முகேஷ் சவுத்திரி சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஏனென்றால், இந்த ஆண்டு தீபக் சஹார் அணியில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார் முகேஷ்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here