வீடியோ ; இப்படியெல்லாம் அவுட் பண்ணலாமா ? பாவம் ல ; ரிஷாப் பண்ட் செய்த ரன் அவுட் இணையத்தை கலக்கி வருகிறது…!

நேற்று மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சரியான பேட்டிங் அமையாத காரணத்தால் பார்ட்னெர்ஷிப் செய்ய முடியாமல் விக்கெட்டை இழந்து வந்ததது பஞ்சாப் அணி. இறுதி ஓவர் வரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 115 ரன்களை அடித்த நிலையில் அனைவரின் விக்கெட்டை இழந்தது.

பின்பு 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு இந்த போட்டி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனென்றால் வார்னர் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் வெறும் 10.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த நிலையில் 119 ரன்களை அடித்தது டெல்லி அணி.

அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றியை கைப்பற்றியது. இதற்கிடையில், பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் பார்ட்னெர்ஷிப் இல்லாமல் திணறிக்கொண்டு விளையாடி வந்ததது பஞ்சாப். அதில், இறுதி ஓவரான 20 வது ஓவரில் முஸ்தபிஸ்ர் வீசிய பந்தை பஞ்சாப் பேட்ஸ்மேன் அர்ஷதீப் சிங் எதிர்கொண்டார்.

அப்பொழுது வேகமாக ஓடுவதற்கு பதிலாக எதிரில் இருந்த பேட்ஸ்மேனிடம் பேசிக்கொண்டே இருந்ததை கவனித்த ரிஷாப் பண்ட் ஓடிவந்து ரன் – அவுட் செய்தார். அதன் வீடியோ, இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ ;