இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு நிச்சயம் தான் ; பையன் பட்டைய கிளப்ப போகிறார் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதுவரை 14 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த முறை இரு அணிகள் புதிதாக அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதுமட்டுமின்றி, இந்த முறை மெகா ஏலம் நடந்து முடிந்த நிலையில் அனைத்து அணிகளும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்பது சந்தேகம் தான். ஏனென்றால் ஐபிஎல் போட்களில் முன்னணி அணியாக திகழும் மும்பை, சென்னை, டெல்லி போன்ற அணிகள் இந்த முறை புள்ளிபட்டியலில் மோசமான இடத்தில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெற தொடங்கினால் போதும் முன்னாள் வீரர் அவ்வப்போது அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் ; “நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கான வாய்ப்பு இருக்கும்.”

“இப்பொழுது ஒரு பவுலர் பவுலிங் செய்து அதிரடியாக விளையாடினால் நிச்சயமாக பவுலருக்கு பின்னடைவு ஏற்படும் அதுதான் உண்மை. அவேஷ் கான் நிச்சியமாக சிறந்த பவுலர் தான். மக்கள் அவரை பற்றி என்ன யோசனை செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. நிச்சியமாக இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு இருக்கும்.”

“எப்பொழுதும் அவரது பவுலிங் மிகவும் வேகமாக தான் இருக்கும். கடந்த போட்டியில் இறுதியாக பவுலிங் செய்த அவேஷ் கான் அவரது பவுலிங் சரியாக இல்லை. அதனால் ரன்களை அடித்தனர். அதனால் சரியாக பயிற்சி செய்தால் நிச்சியமாக சரியான லென்த் கிடைக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

இரு நாட்களுக்கு முன்பு லக்னோ மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிகள் மோதின. அதில் பவுலிங் செய்த அவேஷ் கான் 4 ஓவர் பவுலிங் 24 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடிய அவேஷ் கான் 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோத உள்ளனர்…!