இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் இவர் தான் ; இவருடைய ஆட்டம் அதிரடியாக உள்ளது ; சோயிப் அக்தர்

0

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதுவரை 30 போட்டிகளில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 22 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் வென்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை, இருப்பினும் அதிரடியாக விளையாடிய மும்பை அணி இறுதியாக 161 ரன்களை அடித்தனர்.

பின்பு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா. முதல் 10 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதற்கு மேல் பேட் கம்மின்ஸ் அணியின் அதிரடியான ஆட்டத்தால் 16 ஓவர் முடிவில் 162 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா.

அதில் பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 56 ரன்களை விளாசியுள்ளார். அகில் 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது…!

இந்த போட்டியை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ; ” ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக கொல்கத்தா அணியை வழிநடத்தி வருகிறார். எனக்கு தெரிந்து இதுவரை அவரது போட்டியில் எந்த அழுத்தமும் இல்லாதது போல தான் தெரிகிறது.”

“எனக்கு தெரிந்து அவரது ஐபிஎல் கேப்டன்ஷி, எதிர்கால கேப்டனாக வளம் வர அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் நிரந்திரமான இடத்தை கைப்பற்றி, இந்திய அணியையும் வழிநடத்த வேண்டும். அவரது (ஷ்ரேயாஸ் ஐயர்) திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் சோயிப் அக்தர்.”

மேலும் ரஹானே பற்றி பேசிய சோயிப் அக்தர் கூறுகையில் ; “வருகின்ற போட்டியில் ரஹானே அதிக ரன்களை அடித்து கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்த வேண்டும். ரஹானே நிச்சியமாக இனிவரும் போட்டிகளில் ப்ராண்ட் ஆக மாறப்போகிறார்.”

“அதனால் ஒருசில போட்டிகளை வைத்து கொல்கத்தா ரஹானேவை வெளியேற்றுவது சரியில்லை, ஆனால் நிச்சியமாக அவரது விளையாட்டை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார் சோயிப் அக்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here