இவர் மட்டும் இல்லையென்றால் எங்கள் டீம் ஜெய்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது ; ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

நேற்று புனேவில் உள்ள மஹராஷ்டிர மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்,ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரரான மெத்திவ் வெட் 1 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் இந்த முறை சுமன் கில் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய ரன்களை குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் அடித்துள்ளனர்.

அதில் சுமன் கில் 84, விஜய் ஷங்கர் 13, ஹார்டிக் பாண்டிய 31, மில்லர் 20, ராகுல் திவேதிய 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ரிஷாப் பண்ட் மட்டுமே அதிரடியான ஆட்டத்தை விளையாடி கொண்டு இருந்த போதும், சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

அதனால் இறுதிவரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையிலோ 157 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அசத்தலான பவுலிங் செய்த குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதனால் புள்ளிபட்டியலில் குஜராத் அணி 3வது இடத்திலும், டெல்லி அணி 4வது இடத்திலும் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டிய கூறுகையில் ; “இன்றைய போட்டியில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அவர்களது பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர். உண்மையிலும் டெல்லி அணி தான் சற்று ஓங்கி உள்ளது போல எனக்கு தோன்றியது.”

“ஆனால் அதனை லாக்கி பெர்குசன் அதனை மாற்றியுள்ளார். எனக்கு தெரிந்து 10 அல்லது 15 ரன்கள் குறைவாக இருந்தது போல தான் நான் நினைத்தேன். ஆனால் எங்கள் அணியின் பவுலர்களால் எனக்கு அதிக நம்பிக்கை வந்தது. அதுமட்டுமின்றி, பவுலிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஆரோன் க்கு காயம் ஏற்பட்டது.”

“அதனால் அந்த இடத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அந்த நேரத்தில் ரிஷாப் பண்ட் விளையாடி கொண்டு இருந்த போது டெல்லி அணிக்கு சரியான ஒரு நிலை உருவானது. ஆனால், அதில் லாக்கி அவரது விக்கெட்டை கைப்பற்றி போட்டியை எங்களுக்கு சாதகமாக மாற்றினார்.”

அதுமட்டுமின்றி, சுமன் கில் இன்று விளையாடி மாதிரி தான் நாங்கள் எப்பொழுதும் அவர் விளையாட வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆமாம், அவரிடம் இருந்து மற்ற வீரர்கள் தன்னம்பிக்கை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here