இவர் விளையாடும் விதம், பயிற்சி செய்யும் முறை அப்படியே தோனி மாதிரி தான் ; ரவி சாஸ்திரி புகழாரம் ;

0

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, இந்திய வீரரையும், தோனியையும் சேர்த்தி ஒரே மாதிரி இருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த 26ஆம் தேதி முதல் 15வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில் சில போட்டிகளுக்கு முன்பு மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் அடித்தனர். பின்னர், இரண்டாவது பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.2 ஓவர் முடிவில் 179 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வென்றுள்ளது டெல்லி.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; “ரிஷாப் பண்ட் மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளார். அவர் எப்பொழுதுமே அவரது உண்மையான விளையாட்டை மட்டுமே விளையாடி வருகிறார்.ரிஷாப் பண்ட் போல சரியாக விளையாடுவது சுலபம் இல்லை.”

“ஏனென்றால் அவர் (ரிஷாப் பண்ட்)-க்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். எப்பொழுதும் ரிஷாப் பண்ட் ஸ்ட்ரைக் ரேட் பற்றி யோசனை செய்து கொண்டு தான் விளையாடுவார். அதனால் தான் 4வதாக பேட்டிங் செய்து வருகிறார். ஒருவேளை அவர் மட்டும் விளையாட தொடங்கினால் அவ்வளவு தான்.”

தோனியின் யுக்தி எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் (தோனி) சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சரியாக பயன்படுத்தி பவுலிங்கில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்வதை பார்த்தால் தோனி போல தான் இருக்கும்.

ஆனால் கேப்டன் தோனியை போல இல்லை. ரிஷாப் பண்ட் க்கு மிகவும் பிடித்த ஒருவர் என்றால் அது மகேந்திர சிங் தோனி.அதனால் அவரை போல ரிஷாப் பண்ட் பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறார். ஒரு போட்டிக்கு முன்பு ரிஷாப் பண்ட் செய்யும் பயிற்சி மற்றும் வேலை எல்லாம் தோனியை போலவே இருக்கும்.”

“தோனியை போலவே ரிஷாப் பண்ட் மிகவும் அமைதியான வீரர். 23வயதான ரிஷாப் பண்ட் அவரையே முன்னேற்றி கொண்டு விளையாடி வருகிறார். டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் பவர் ப்ளேவில் விக்கெட்டை இழக்கவில்லை என்றால், ரிஷாப் பண்ட் 3வதாக கூட பேட்டிங் செய்யலாம் அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here