இவங்க இப்படி விளையாடினால் தோல்வி தான் கிடைக்கும்..! தோல்விக்கு முக்கியமான ஒரே காரணம் இதுதான் ; டூப்ளஸிஸ் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022 : ஐபிஎல் டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 39 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி மூன்றாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இந்த முறை புதிய அணிகளான (லக்னோ அல்லது குஜராத்) அணிகளில் ஒன்று தான் இந்த முறை கோப்பையை வெல்ல போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் தொடர்ந்து ஆட்டத்தை இழந்து வந்த நிலையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஏனென்றால் அதிக ரன்களை அடிக்கும் ஜோஸ் பட்லர் இந்த முறை 8 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியாக பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 144 ரன்களை அடித்தனர்.

பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. சுலபமாக அடித்துவிடலாம் என்று நினைத்த பெங்களூர் அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. இறுதிவரை போராடிய பெங்களூர் அணி 19.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 115 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதில் டூப்ளஸிஸ் 23, அஹமத் 17, ஹசரங்க 18 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூர் கேப்டன் டூப்ளஸிஸ் கூறுகையில் ;

” எப்படி கடைசி போட்டியில் பேட்டிங் செய்தோமோ, அதேபோல தான் இந்த போட்டியிலும் விளையாடியுள்ளோம். எனக்கு தெரிந்து 20ரன்கள் தேவையில்லாமல் கொடுத்துவிட்டோம். அதுமட்டுமின்றி, சரியாக பீல்டிங் செய்யாமல் சில முக்கியமான கேட்ச் பிடிக்காமல் விட்டதில் தான் எங்களுக்கு தோல்வியே கிடைத்தது.”

“முதலில் எங்கள் அணியில் விளையாடும் டாப் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாட வேண்டும். அப்பொழுது தான் அணியை பாசிட்டிவ் ஆக கொண்டு செல்ல முடியும்.”

“இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் பெரிய வீரர்கள் கடந்து செல்ல முடியும், விராட்கோலி அவரது பெஸ்ட் ஆன விளையாட்டை விளையாடி வருகிறார். அனைத்து பெரிய வீரர்களுக்கும் சில மோசமான தருணம் இருக்கும். அதனை அவர்கள் நிச்சியமாக கடந்து செல்வார்கள்.”

“விராட்கோலியை பற்றி குறை சொல்லவே முடியாது. நிச்சியமாக அவரது விளையாட்டை கூடிய விரைவில் விளையாட தொடங்குவார் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்”. பெங்களூர் அணி இதுவரை 9 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.