அதிக ரன்கள் பட்டியலில் ஜோஸ் பட்லரை பின்னுக்கு தள்ள போகும் இந்திய வீரர் இவர் தான் ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும், இதுவரை வெற்றிகரமாக 37 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று 38வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதம் தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த காரணமாக இருந்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் தான் அதிகபட்சமாக மூன்று முறை சதம் அடித்துள்ளார். அவரை அடுத்து கே.எல்.ராகுல் இரு சதம் அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ;

“எனக்கு தெரிந்து கே.எல்.ராகுல் மிகவும் தெளிவாக அவரது விளையாட்டை விளையாடி வருகிறார். அனைத்து விதமான ஷாட்ஸ் அடித்து வருகிறார். அதுவும் புதிய ஐபிஎல் லக்னோ அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, எப்பொழுதும் அதிக ரன்களை அடிக்க ஓப்பனிங் பேட்ஸ்மேன்களால் மட்டுமே முடியும்.”

“ஏனென்றால் அவர்களுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும்.அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு போட்டி கே.எல்.ராகுல் மற்றும் ஜோஸ் பட்லருக்கு இடையே மட்டும் தான் போட்டி இருக்க போகிறது. ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட தொடங்கினால், அவரது அணி சிறப்பாக விளையாடும்.”

“அதனால் நிச்சியமாக ஜோஸ் பட்லர் ரன்களை விட கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிப்பார் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி. கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். ஆனால், இந்த முறை மெகா ஏலம் என்பதால் நான் ஏலத்தில் பங்கேற்க போகிறேன் என்று கூறி பஞ்சாப் அணியில் இருந்து விலகினார்.

அதனை சரியாக பயன்படுத்திய ‘லக்னோ அணி அவரை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 5 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர். இன்னும் மூன்று போட்டிகளில் வென்று விட்டால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கும்..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களே, கே.எல்.ராகுல் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டுமா ?? அல்லது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்குமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.