விராட்கோலியே வாயடைத்து போய் நின்ற அளவிற்கு இவருடைய பவுலிங் இருந்தது ; பாரத் அருண் பேட்டி ;

0

வருகின்ற 6 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இரு அணிகளும் திவிரமான பயிற்சி செய்து வருகின்றனர்.

இப்பொழுது தான் இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை முடிந்து ரோஹித் சர்மா தலைமை தாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி இந்திய அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு பிறகு தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றார்.

அவரை தொடர்ந்து இப்பொழுது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று வருகிறார். ரவிசாஸ்திரி மற்றுமின்றி பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் -ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் (பாரத் அருண் )அளித்த பேட்டியில் ; சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2018ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றார் பும்ரா.

கிட்டத்தட்ட 12 நாட்கள் பயிற்சி செய்தோம். அதில் பும்ரா செய்த பவுலிங் விராட்கோலிக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது நம்மிடம் இருக்கும் பவுலர்களில் இவரது பவுலிங்கை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று விராட்கோலியே கூறியுள்ளார் ” பாரத் அருண். பின்னர் நானும் (பாரத் அருண்) மற்றும் ரவி சாஸ்திரி யும் பல யோசனைக்கு பிறகு பும்ராவை முதலில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடிவு செய்தோம்.

அதற்கு முன்னாள் பும்ரா இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் விளையாடி தான் வருகிறார். சரியாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா விராட்கோலி மற்றும் ரவி சாஸ்திரியிடம் அதிக பேசுனார், பின்னர் இறுதியாக அவரை ப்ளேயிங் 11 ல் விளையாட வைத்தனர். அப்படி தான் பும்ரா இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கினார் என்று குறியுள்ளார் பாரத் அருண்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்ற பட்டார். அதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாவும் , ஜஸ்ப்ரிட் பும்ரா துணை கேப்டனாகவும் செயல்பட்டனர். ஆனால் அதில் இந்திய அணி 0 – 3 என்ற கணக்கில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here