ரோஹித் இல்லை ; அடுத்த ஆண்டு WC 2023ல் இந்திய அணியின் தொடக்க வீரர் இவர் தான் ; முன்னாள் இந்திய வீரர் பேட்டி ;

இந்திய மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் என்று பல போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி :

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது தான் உண்மை. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் திறமையான பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துக்கொண்டு வருவது தான்.

ஆமாம், ஐபிஎல் டி-20 மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. இருப்பினும், இந்திய அணியில் யார் தொடக்க வீரர் என்ற கேள்வி இப்பொழுதும் மர்மமாகவே இருக்கிறது. கடந்த 12 டி-20 சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணியில் 7க்கு மேற்பட்ட தொடக்க வீரர்களை மாற்றிக்கொண்டு வந்துள்ளனர்.

அதில் இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தனர். ஆனால் யார் நிரந்திரமான வீரர் என்று தெரியவில்லை. ஆனால் இப்பொழுது ரோஹித் ஷர்மாவுடம் நிச்சியமாக கே.எல்.ராகுல் தான் இனிவரும் போட்டிகளில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி-20 போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக உறுதியான நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் யார் தொடக்க வீரர் என்ற கேள்வி எழுகிறது. ரோஹித் ஷர்மாவுடன் ஷிகர் தவான் பார்ட்னெர்ஷிப் செய்வது பெரிய அளவில் இருப்பது இல்லை.

36வயதான ஷிகர் தவான் இனிவரும் போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனால், அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் சிரமம் தான். ஷிகர் தவானுக்கு பிறகு யார் தொடக்க வீரராக இந்திய அணியில் யார் இடம்பெறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சமீபத்தில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா சில முக்கியமான தகவல் அறிவித்துள்ளது.

அதில் “சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கும் நிலையில் தொடக்க வீரரை மாற்றுவது கடினம் தான். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்க தான் ஜிம்பாபே தொடரில் தொடக்க வீரராக விளையாட போகிறார். டி-20 உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுலின் பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணிக்கு தேவைப்படுகிறது.”

“அதனால் கே.எல்.ராகுலுக்கு அதிக பேட்டிங் செய்ய நேரம் வேண்டும், அதுதான் முக்கியமான ஒன்று. அவருக்கு பிறகு சுமன் கில் தொடக்க வீரராக வளர அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுவும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நிச்சியமாக சுமன் கில் சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் தாஸ்குப்தா.”