நாளை மதியம் முதல் ஜிம்பாபே மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.


சமீபத்தில் தான் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இப்பொழுது ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரில் விளையாட போகிறது இந்தியா.
மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மாதம் இறுதியில் ஆசிய கோப்பை போட்டிக்கான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் சஹார், தீபக் ஹூடா, ராகுல் த்ரிப்தி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்டுல் தாகூர், அக்சர் பட்டேல், அவ்ஸ் கான், முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இருப்பினும் யார் யார் ப்ளேயிங் 11 ல் விளையாட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது…! ஜிம்பாபே மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணியின் உத்தேச அணியின் விவரம் இதோ ;
தொடக்க வீரர் : கே.எல்.ராகுல் (கேப்டன்) மற்றும் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்)
மிடில் ஆர்டர் : சுமன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன்
ஆல் – ரவுண்டர்: தீபக் ஹூடா, அக்சர் பட்டேல்
பவுலர் : தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், குல்தீப் யாதவ், முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.