சிஎஸ்கே அணிக்கு GOODBYE சொன்ன ஜடேஜா ; இதன் பின்னால் இருக்கும் முக்கியமான சம்பவம் இதுதான் ;

0

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் இருந்து இதுவரை 15 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்று இப்பொழுது சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது…!

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகம் ஆன முதல் போட்டியில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் தலைமை தாங்கி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை.

CSK அணியில் இருந்து வெளியேறிய முக்கியமான வீரர் :

2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி வந்துள்ளார். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை அணியின் அவரது (சுரேஷ் ரெய்னா) பங்களிப்பு பெரியளவில் இல்லாத காரணத்தால் காயத்தை காரணம் காட்டி சுரேஷ் ரெய்னாவை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதனால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார். சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாத காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல தான் கடந்த ஆண்டு 2022 ஐபிஎல் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜாவை இறுதி நேரத்தில் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்பட்ட மோசமான நிலை :

இன்னும் சில ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு தோனி ஓய்வு பெறுவது உறுதி. அதனால் சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி இப்பொழுது எழுந்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்பு சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜாவை அறிவித்தனர்.

ஆனால் சில போட்டிகளுக்கு பிறகு ரவீந்தரை ஜடேஜாவின் விளையாட்டும், சென்னை அணியை வழிநடத்தியதும் தோல்வியாக இருந்த காரணத்தால் கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றி, மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி நிர்வாகம். இதனால் நிச்சியமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு கோபம் ஏற்பட்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னை அணியில் விளையாடுவாரா ரவீந்திர ஜடேஜா ?

ஐபிஎல் 2022 போட்டிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜாவின் நடவடிக்கை சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆமாம், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2022வரை சென்னை அணியில் 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதனை பாராட்டும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். அதற்கு பதிலளித்த ரவீந்திர ஜடேஜா, “நான் இன்னும் 10 ஆண்டுகள் சென்னை அணியில் விளையாடுவேன் என்று கூறிருந்தார்.”

ஆனால் இப்பொழுது அதனை டெலிட் செய்துள்ளதாக ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். அதனால் ரவீந்திர ஜடேஜா இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் விளையாட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here