அவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும் ; மும்பை அணிக்கு முக்கியமான வீரர் இவர் தான் ; ரோஹித் சர்மா பேட்டி

நேற்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் ஆட்டம் அமையவில்லை. அதனா; தொடர்ந்து வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தனர். ஆனால் தோனி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடினார். ஆனால் 16 ஓவர் முடியில் அனைத்து விக்கெட்டையும் இழந்த சென்னை அணி வெறும் 97 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. சென்னை அணியை போல முதலில் சில விக்கெட்டை இழந்தாலும், 14.5 ஓவர் முடிவில் 103 ரன்களை அடித்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை.

இதுவரை இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளனர். அதனால் இந்த இருஅணிகளும் உறுதியாக ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; “இந்த மைதானத்தில் நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதிலும் குறிப்பாக போட்டியின் தொடக்கத்தில் நாங்கள் விக்கெட்டை இழந்த காரணத்தால் சற்று பதற்றம் நிலவியது.”

“அதனால் உடனடியாக பொறுமையாக விளையாட வேண்டும் என்று நங்கள் நினைத்தோம். அதுமட்டுமின்றி, இரு அணிகளிலும் (சென்னை மற்றும் மும்பை) போன்ற பவுலர்களிடம் பென்ஸ் மற்றும் ஸ்விங் போன்ற வற்றை பார்க்க முடிந்தது.அதனால் சந்தோசமாக தான் உள்ளது.”

“ஆனால் போட்டியின் வெற்றி பெற வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். பும்ரா-வுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும். அதனை அவர் சிறப்பாக செய்துள்ளார். அதுதான் சிறப்பாக செய்துவருகிறார். அவரது பங்களிப்பு எங்கள் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.”

“அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு போட்டிகளில் என்ன என்ன பிரச்சனை உள்ளதோ, அதனை அடுத்த போட்டியில் சரி செய்ய போகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”