எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது ; இவங்க இருவரும் இப்படி பவுலிங் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை ; தோனி பேட்டி

போட்டி 59 :

நேற்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

போட்டியின் விவரம் :

முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் ஆட்டம் அமையவில்லை. அதனா; தொடர்ந்து வீரர்கள் அனைவரும் விக்கெட்டை இழந்து கொண்டு வந்தனர். ஆனால் தோனி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் விளையாடினார். ஆனால் 16 ஓவர் முடியில் அனைத்து விக்கெட்டையும் இழந்த சென்னை அணி வெறும் 97 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. சென்னை அணியை போல முதலில் சில விக்கெட்டை இழந்தாலும், 14.5 ஓவர் முடிவில் 103 ரன்களை அடித்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை.

தோனி பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டனான தல தோனி ; 130 ரன்களுக்குள் அடித்தால் நிச்சியமாக அதில் வெற்றிபெறுவது அளவு சுலபம் இல்லை. அதனால் நான் பவுலர்களிடன், போட்டியின் முடிவு ஏதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதனை பற்றி யாரும் யோசிக்க வேண்டாம்.

உங்கள் திறமையை மட்டும் காட்டுங்கள். அதிலும் முகேஷ் மற்றும் சிமர்ஜெட் சிங் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர். யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பவுலிங் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு போட்டியின் சூழ்நிலையை புரிந்து விளையாட சில போட்டிகள் ஆனது.

இது எல்லாருக்கும் நடிக்கும் ஒரு சாதாரணமான விஷயம் தான். ஐபிஎல் போட்டிகளில் பலருக்கு வாய்ப்புகள் கிடைத்து கொண்டு வருகிறது. அதில் சிலர் அவரவர் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியின் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர்…!

பவுலிங் செய்யும் முதல் சில பந்துகளில் , அவர்களுக்கு புரிந்து விடும் எப்படி பவுலிங் செய்ய வேண்டுமென்று. அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் எங்கள் பேட்ஸ்மேன்கள் பலர் விக்கெட்டை இழந்தனர். நிச்சியமாக இதனை அவர்கள் கற்று கொண்டு அடுத்த போட்டியில் தவறை செய்யாமல் இருக்க உதவும் என்று கூறியுள்ளார் தோனி.

சென்னை அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!