முதலில் ரெய்னா இப்போ ஜடேஜா- ஆ? இந்த காரணத்தால் தான் ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து வெளியேறியுள்ளார் ;

0

ஐபிஎல் 2022 :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி இன்னும் சில போட்டிகள் மட்டுமே உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

சென்னை அணியின் விவரம் இதோ :

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். அதிலும் இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால் இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.

ஏனென்றால் இதுவரை சென்னை அணி விளையாடிய 12 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். அதனால் இந்த ஆண்டு அவ்வளவு தான். இருப்பினும் சென்னை அணியில் பல குழப்பங்கள் எழுந்து வருகின்றனர்…!

ரவீந்திர ஜடேஜா ?

இந்த ஆண்டு தொடக்கத்தில் தோனிக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி. ஆனால் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி முதலில் சில போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி போட்டியில் தோல்வியையும் பெற்று வந்தனர்.

அதனால் சென்னை அணி நிர்வாகம் எடுத்த அதிரடியான முடிவால் மீண்டும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் இருந்தே ரவீந்திர ஜடேஜாவுக்கும் சென்னை அணிக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ ? என்று பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பின்னர் சில தினங்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜா பீல்டிங் செய்யும்போது அவரது விலா எலும்பில் பலமாக அடிபட்டது. இருப்பினும் அந்த போட்டி முடியும் வரை விளையாடினார் ஜடேஜா. ஆனால் அதன் பின்னர் அடுத்த போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று தகவல் வெளியானது.

ஆனால், இதனை தவறாக கருதி, சுரேஷ் ரெய்னாவை போல ஜடேஜா -வை சென்னை அணி வெளியேற்றியதாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்படி எந்த விதமான அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை…!

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க..! சென்னை அணியில் என்ன தான் நடக்குது ? அடுத்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் விளையாடுவாரா ? இல்லையா ?? சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here