இந்திய வீரரான இவருக்கு பவுலிங் செய்யவே கடுப்பாக இருக்கும் ; பிரெட் லீ ஓபன் டாக் ; இந்திய வீரரை பற்றி பேசியுள்ளார் ;

0

இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 6ஆம் தேதி அன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.

எப்பொழுது போட்டி நடந்தாலும் போட்டி நடக்கவில்லை என்றாலும் ஒரு வீரர் அவர் விளையாடிய போது சந்தித்த கஷ்டங்களை, பெற்ற விருதுகளை பற்றி பேசுவது வழக்கம். அதுமட்டுமின்றி மற்ற வீரர்களை பற்றி கருத்துக்களை பேசுவதும் சாதாரணமாக மாறிவிட்டது. அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ அளித்த பேட்டியில் ; இவங்க இருவருக்கு பவுலிங் செய்ய அவ்வளவு கடுப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய பிரெட் லீ , நான் எப்பொழுதும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு பவுலிங் செய்யவே எனக்கு பிடிக்காது. ஏனென்றால் அவர் எப்பொழுது எந்த பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் சுழல் பந்து வீச்சு செய்தால் சற்று யோசிப்பார்.

முத்தையா முரளிதரன் சரியாக பவுலிங் செய்வார், அதனால் எனக்கு அவர் கடினமான வீரர் தான் பவுலிங் செய்ய. எனக்கு எப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களிடன் விளையாடுவது மிகவும் பிடிக்கும். என்னை பொறுத்தவரை தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரை கல்லிஸ் தான் சிறந்த ஆல்-ரவுண்டர். அவர் தான் சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான் 100 சதம் அடித்துள்ளார். கடந்த 1989ஆம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பின்னர் 2013ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றுள்ளார் சச்சின். இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களையும்,462 ஒருநாள் போட்டியில் 18000க்கு மேற்பட்ட ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார்.

பின்னர் ஐபிஎல் டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்துள்ளார். ஆனால் இப்பொழுது அதே அணியின் பயிற்சியாளராக இன்னும் ஐபிஎல் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறது…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here