என்ன இந்த இருவரும் இப்படி விளையாடுகிறார்கள் !! இந்திய அணியில் இருந்து வெளியேற்றி, ரஞ்சி கோப்பையில் விளையாட சொல்லுங்க ; கங்குலி ஓபன் டாக் ;

0

வருகின்ற 6ஆம் தேதி முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. அதில் இந்திய அணி வெற்றி பெறுமா ?

இதற்கிடையில், இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் இருக்கும் வீரரை பற்றி பேசியுள்ளார் கங்குலி. சமீப காலமாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாட வருகிறார்கள் ரஹானே மற்றும் புஜரா. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்வியை பெற்றது.

அதில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஆமாம்..!! ஏதாவது ஒரு இன்னிங்ஸ் போட்டியில் அரைசதம் அடித்து மற்ற இன்னிங்ஸ்-ல் எந்த ரன்களை அடிக்காமல் ஆட்டம் இலந்துள்ளனர். இதனால் கூடிய விரைவில் இந்திய அணியில் இருந்து வெளியேற்ற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுகின்றன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்த பேட்டியில் ; இந்திய அணியில் முக்கியமான வீரர்களாக ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் விளையாடி வந்தனர். அவர்கள் இருவரும் இப்பொழுது மீண்டும் ரஞ்சி கோப்பை போட்டியில் களமிறங்கி விளையாட வேண்டும். அவர்கள் மீண்டும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ரஞ்சி கோப்பை போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. அதில் நாம் அனைவரும் விளையாடி வந்துள்ளோம். அதனால் ரஹானே மற்றும் புஜரா ஆகிய இருவரும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட வேண்டும். அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாடுவது குறைவு தான். அதனால் அது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

இந்தியாவில் 2020 – 2021 போட்டிகளை நடத்த முடியாமல் போய்விட்டது. அது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு போட்டியை நடந்த முடிவு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. சமீபத்தில் பிஹார் கோப்பையை நடந்த முடிவு செய்தோம். அதில் முதல் நாளில் 50 க்கு மேற்பட்ட வீரர்கள் கொரோனா பாதிக்கப்பட்டார்கள். அது அவ்வளவு சுலபம் இல்லை என்று கூறியுள்ளார் கங்குலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here