விராட்கோலி இல்லை ; ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் இவர் தான் எப்பையுமே ராஜா ; இவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை ; ரவி சாஸ்திரி…!

0

ஐபிஎல் 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இன்னும் 12 போட்டிகள் மட்டுமே உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. இந்த முறை யார் கோப்பை பற்ற போகிறார்கள் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும். இதனை அடுத்து ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

எப்பொழுதும் ஒரு வீரரை பற்றி மற்றொரு வீரர் அல்லது யாராவது ஏதாவது கருத்தை தெரிவிப்பது வழக்கம். அதேபோல, தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் இப்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் ;

தோனி தான் சிறந்த கேப்டன். அதிலும் குறிப்பாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை. நான் சொல்வதை நம்ப வேண்டும், நீங்கள் அவருடைய records எடுத்து பாருங்க. அவர் ஐபிஎல், சாம்பியன் லீக் , அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார்.

இவரை இதுவரை எந்த கேப்டனும் நெருங்கிய கூட வரவில்லை என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி. அவர் சொன்னது போல தோனிக்கு நிகர் இதுவரை யாரும் இல்லை. ஏனென்றால் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் பெற்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி மட்டும் தான்.

வேறு எந்த நாட்டு வீரரும் இப்படி செய்தது இல்லை. தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார். ஆனால் இன்னும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக இருந்து சிறப்பாக வழிநடத்தி வருகிறார் தோனி.

இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெட்ரா முதல் அணி எது என்று கேட்டால் ? அது சிஎஸ்கே அணி தான். அதுமட்டுமின்றி, அக்டோபர் 17ஆம் தேதி முதல் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பம் ஆக உள்ளது. அதில் தோனி தான் இந்திய அணிக்கான ஆலோசகராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் விராட்கோலி, ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து வெற்றியை கைப்பற்றுமா இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17ஆம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here