என்ன ஆனாலும் இவங்க மட்டும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவே கூடாது ; சேவாக் ஓபன் டாக்… அந்த அணி எது தெரியுமா ? காரணம் ? முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2021 போட்டியின் இரண்டாம் பாகம் இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, இதுவரை 48 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் 12 போட்டிகள் மட்டுமே உள்ளது ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. எந்த எந்த அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் என்பதில் பல சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக் அளித்த பேட்டியில்; இன்னும் சில நாட்களில் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதில் இந்த அணி மட்டும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வரவே கூடாது என்று கூறியுள்ளார். எந்த அணி தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணி தான், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. எனக்கு தெரிஞ்சு அவர்கள் சுலபமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அப்படி ஒருவேளை அணைத்து போட்டிகளில் வெற்றி 14 புள்ளிகள் கிடைத்துவிடும்.

ஆனால் அது அவ்வளவு ஒன்றும் சுலபம் இல்லை. சில நேரங்களில் தவறுகள் ஏற்படும், அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வி கூட வரலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால், இதேமாதிரி ஆன சூழ்நிலையில் பல முறை வெற்றிபெற்று ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும்.

ஆனால் எனக்கு அந்த வரலாற்றில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார் விரேந்தர் சேவாக். இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பைகளை கற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இந்தமுறை தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போராடி வருகிறது.

இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, 2019 மற்றும் 2020 ஆகிய இரு ஆண்டுகளிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை அணி, இந்தமுறை வெற்றிபெற்றால் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற முதல் அணியாக மும்பை அணி இருக்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வருமா இல்லையா ?? எந்த எந்த அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று COMMENT பண்ணுங்க..!