இவர் தான் சிறந்த டி-20 வீரர் ; இந்திய வீரரை பற்றி பேசினார் ; இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கார பேட்டி ;

0

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது. அதனால் ஐபிஎல் டி-20 ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது.

அதனால் இந்த ஆண்டு மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ள காரணத்தால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டி வந்தாலே போதும் ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம்.

அதில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார கூறுகையில் ; “இவர் தான் எனக்கு தெரிந்து சிறந்த டி-20 போட்டி வீரர். எனக்கு தெரிந்து ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் எதிர்காலமே இவர் தான். சஞ்சு சாம்சன் மிகவும் திறமையான வீரர், போட்டி எந்த நிலைமையிலும் இருந்தாலும் வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் என்பதில் சந்தேகமில்லை. “

அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும் அதனால் அவர் என்ன செய்கிறார் என்பதை நான் கவனிக்க ஆரம்பித்தேன். முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய போது அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதில் என்ன என்ன உளது என்பதை பற்றி ஆராய ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமின்றி, ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் சாம்சன்.

அவர் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒன்று தான் அவர் (சஞ்சு சாம்சன்) சாதாரணமாக ஒரு வீரர். சஞ்சு சாம்சன் எப்பொழுது அணியில் இருக்கும் அனைத்து வீரர்களிடமும் சிறப்பாக முறை வழிநடத்துவார். அதுமட்டுமின்றி அவ்வப்போது ஏதாவது நகைச்சுவை செய்வதும் வழக்கம் தான் என்று கூறியுள்ளார் குமார் சங்கக்கார.

குமார் சங்ககாரா இப்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தான் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here