CSK அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக இவர் தான் சரியான வீரர் ; பையன் மாஸ் பண்ணுவார் ; முன்னாள் வீரர் உறுதி

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 முறை ஐபிஎல் டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது…! ஐபிஎல் போட்டிகள் என்று வந்தாலே போதும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதுவும் ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் தோனியை பற்றி பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மெகா ஏலத்தை நடத்தி முடிந்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் டி-20 2022 ஏலத்தின் போது தீபக் சஹாரை 14 கோடி விலை கொடுத்து மீண்டும் சென்னை அணியே கைப்பற்றியுள்ளது. ஆனால் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இருந்து விலகினார். பின்னர் ஐபிஎல் டி-20 போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா ??

சமீபத்தில் வெளியான தகவலின் படி தீபக் சஹார் முதல் பாதி போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியானது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருக்கு பதிலாக அணியில் யார் இடம்பெற போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது..!

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ” நிச்சியமாக தீபக் சஹார் சென்னை அணியில் இல்லாதது பெரிய இழப்பது தான். அதுமட்டுமின்றி அவருடைய பவுலிங் மற்றும் பவர் ப்ளேவில் அவர் கைப்பற்றும் விக்கெட் மிகவும் முக்கியமான ஒன்று தான்.

தீபக் சஹாருக்கு பதிலாக மற்ற வீரர்களை தேர்வு செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. கூடிய விரைவில் தீபக் சஹார் அணியில் இடம்பெறுவார். இருப்பினும் தீபக்-க்கு பதிலாக ஹங்காரகேகர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த முறை ஷர்டுல் தாகூர் சென்னை அணியில் இல்லை.

அதனால் நிச்சியமாக தீபக் சாருக்கு பதிலாக சரியான வீரரை தேர்வு செய்ய வேண்டும். அதனால் இளம் வீரரான புதிதாக அணியில் வந்து சிறப்பாக விளையாடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் சென்னை அணியில் தோனி உள்ளார், ஸ்டம்ப் பின்னால் நின்று கொண்டு நிச்சியமாக இளம் வீரர்களை வழிநடத்தினால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.