இந்திய அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரர் தான் ; விராட்கோலி ஓபன் டாக் ; என்ன சொன்னார் தெரியுமா ?

நேற்று இரவு நடைபெற்ற 33வது போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதனால் வேறு வழியில்லாமல் வழக்கம் போல் முதலில் களமிறங்கிய இந்திய அணி.

ஆனால் முன்பு போல் இல்லாமல், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகிய இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் மட்டுமே கிட்டத்தட்ட 135 ரன்களை பார்ட்னெர்ஷிப் செய்து விளசினார்கள். பின்னர் இருவரும் ஆட்டம் இழக்க ரிஷாப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டிய அவர்கள் பொறுப்பேற்று கொண்டு வெளுத்து வாங்கினர்…!

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 210 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 69, ரோஹித் சர்மா 74, ரிஷாப் பண்ட் 27, ஹார்டிக் பாண்டிய 35 ரன்களை குவித்தனர். பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலகுடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாததால் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததால் 20 ஓவர் முடிவில் 144 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றி ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 போட்டியில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இப்போது புள்ளிப்பட்டியளில் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னெறியுள்ளது இந்திய. போட்டி முடிந்த பிறகு விராட்கோலி அளித்த பேட்டியில் ;

ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியில் விளையாடியது சந்தோசமாக உள்ளது. அதுவும் மிடில் ஓவரில் பந்து வீசி சரியான நேரத்தில் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் இருப்பது எங்கள் அணிக்கு மிகப்பெரிய நல்ல விஷயம். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக பவுலிங் செய்தார் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்…..!!!

இன்னும் இந்திய அணிக்கு அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இருந்தாலும் அது கடினம் தான் …. இன்னும் இந்திய அணிக்கு 2 போட்டிகள் உள்ளன. ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றது நல்லதா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!