“அந்த வீரரை திமிர்பிடித்தவர் என்று நினைத்தேன்”- மனம்திறந்து பேசிய ஏ.பி.டி.வில்லியர்ஸ்!

0

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

அன்றைய தினம் இரவு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நெருங்கியுள்ள உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வீரர்கள் அடுத்தடுத்து, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, வீரர் ஒருவர் போட்டியில் இருந்து விலகுவதால், மாற்று வீரரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வீரரைத் தேர்வு செய்வதிலும் காலதாமதம் ஏற்படுவதால், அணி நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மார்ச் 26- ஆம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், கேப்டன் விராட் கோலி, கிறிஸ் கெயில், ஏ.பி.டி.வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் அணியின் நிர்வாகிகள், கத்தார் ஏர்வேஸின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ், “நான் முதன்முதலில் விராட் கோலியைச் சந்தித்த போது, அவர் துணிச்சலாக இருந்தார். அத்துடன், திமிரு பிடித்தவராக இருக்கிறாரே என்று நினைத்தேன். பின்னர், அவருடன் பழகிய போது தான் நான் நன்கு புரிந்துக் கொண்டேன். “

“அவர் மீதான என்னுடைய பார்வை மாறியது. அதைத் தொடர்ந்து, விராட் கோலி மீதான மரியாதைக் கூடியது. அவர் நல்ல மனிதர், நல்ல வீரர் ஆவார். எனக்கு நிறைய நினைவுகள் பெங்களூரு அணியில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி குறித்து மனம்திறந்து பேசிய வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் கிறிஸ் கெயில் மற்றும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகிய வீரர்களுக்கு அணி நிர்வாகம் ‘ஆல் ஆப் தி ஃபேம்’ என்ற கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களின் ஜெர்சி எண்ணாண 17 மற்றும் 333 ஆகியவற்றை இனி யாரும் பயன்படுத்த முடியாது. அதேபோல், நடப்பு ஐ.பி.எல். போட்டிகளில், அந்த வீரர்கள் விளையாட மாட்டார்கள். மாறாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடும் போட்டிகளில் கலந்துக் கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here