இதற்கு பிறகு இவரால் இந்திய அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை ; இவரை வெளியேற்றுங்கள் ;

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியும் தொடரை வென்றுள்ளனர்.

அதனை அடுத்து வருகின்ற 4ஆம் தேதி முதல் பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரும், இரு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இந்திய அணியில் வாய்ப்பை வீண் செய்து கொண்டு வரும் துணை கேப்டன் :

சமீப காலமாகவே டி-20 மாற்றம் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பண்ட்-க்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரிஷாப் பண்ட் அதனை சரியாக பயன்படுத்தினாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை.

அதிலும் டி-20 போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் ரிஷாப் பண்ட் 6, 11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதேபோல ஒருநாள் போட்டியிலும் 15,10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதனால் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் வீரரான கனேரியா ஓபன் டாக்:

ரிஷாப் பண்ட் பற்றி பேசிய கனேரியா கூறுகையில் : “ரிஷாப் பண்ட் இனிமேல் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான வீரர் கிடையாது, அதனை இந்திய கிரிக்கெட் அணி ஒப்புக்கொள்ள வேண்டும். அனைத்து விதமான இடங்களிலும் அவரை விளையாட வைத்து பார்த்தனர். ஆனால் ஒரு பலனும் இல்லை.”

“ஆனால் ஏன் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் 36 ரன்களை அடித்தது தவற ? இந்த விஷயத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சஞ்சு சாம்சன்-ஐ சாதாரணமான வீரராக பார்ப்பது மிகவும் தவறான விஷயம் என்று கூறியுள்ளார் கனேரியா.”

ரிஷாப் பண்ட் இனிவரும் போட்டிகளில் இடம்பெற வேண்டுமா ? அல்லது அவருக்கு பதிலாக அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here