ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம் ; வர்ணையாளர் சைமன் டோல் பேட்டி :

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியும், ஒருநாள் போட்டிக்கான தொடரில் நியூஸிலாந்து அணியும் வென்றுள்ளனர்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் :

முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்டு விளையாடும் போது சரியான வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் அணி தவறிவிடுகிறது. ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற வீரர்கள் அணியில் இருக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது.

அதே சமையத்தில் பும்ரா, புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் அணியில் இருக்கும் நேரத்தில் இந்திய அணி வலுவாக காணப்படும். ஒருவேளை இவர்களில் ஏதாவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு தொடரில் பங்கேற்க முடியாமல் சென்றால் இந்திய அணியின் நிலைமை மோசமான நிலைக்கு தான் தள்ளப்படும்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை டி-20 லீக் போட்டிகளில் அப்படி தான் நடந்து. உதாரணத்திற்கு அரையிறுதி சுற்றில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்திய அணியை பலம் என்றும் பலவீனமாக இருக்கிறதா என்று சொல்லவே முடியாது.

நியூஸிலாந்து அணிக்கு தொடரில் ஆதரவு கொடுக்கப்பட்ட வீரர் :

இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விளையாடிய வீரர் தான் சஞ்சு சாம்சன். அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆமாம், இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய ரிஷாப் பண்ட் பங்களிப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல தான் நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் வர்ணையாளர் சைமன் டோல் ” ரிஷாப் பண்ட் ஆ ? சஞ்சு சாம்சன் ஆ ? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் ரிஷாப் பண்ட் சராசரியாக ஒரு போட்டிக்கு 35 ரன்கள் என்ற கணக்கில் அடித்து வருகிறார். ஆனால் சஞ்சு சாம்சன் சராசரியாக 66 ரன்களை அடித்துள்ளார். அப்படி பார்த்தால் சஞ்சு சாம்சன்-க்கு தான் அதிகப்படியான வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சைமன்.”

இதே போல தான் இப்பொழுது சஞ்சு சாம்சன்-க்கு ஆதரவாக பல கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வரும் ன்,நிலையில், ரிஷாப் பண்ட் -க்கு எதிராக பல எதிரான கருத்துக்கள் எழுந்து வருகின்றனர். இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் ரிஷாப் பண்ட் 6, 11 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் 15, 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.