இனிமேல் டி-20 போட்டிகளில் ரோஹித், விராட்கோலி -க்கு வாய்க்கு கிடையாது ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ; காரணம் இதுதான் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் டி-20 போட்டிக்கான தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்ற நிலையில், 2 – 0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் இந்திய அணி வென்றதுள்ளது. எப்பொழுது மற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தொடரிலும் மட்டும் மோசமான நிலையில் விளையாடி வருகின்றனர்.

ஐசிசி தொடரில் மோசமான நிலையில் வெளியேறிய இந்திய :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியதால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது.

அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் வெளியேறிய இந்திய அணிக்கு பல விமர்சனங்கள் வெளியானது. அதனால் இனிவரும் போட்டிகளில் டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டியவை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே டி-20 சர்வதேச போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விராட்கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? என்று பல கேள்விகள் எழுந்தது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் கூறுகையில் : “இந்த ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் முன்னணி வீரர்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதனால் விராட்கோலி, ரோஹித் சர்மாவிற்கு டி-20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை.”

“அதனால் இளம் வீரர்களை வைத்து டெஸ்ட் செய்து வருகிறோம். சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அடுத்த ஆண்டு 2024 டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாட தாயார் செய்ய போகிறோம் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

டி-20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற வேண்டுமா ? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பன்னுங்கா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here