இவர் இல்லாமல் விளையாடுவது சிரமம் தான் ; ஆனால் இரு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக்

0

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் டி-20 போட்டிக்கான தொடரில் ஹர்டிக் பாண்டியவை கேப்டனாகவும், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவை கேப்டனாகவும் அறிவித்துள்ளது பிசிசிஐ.

இன்று இரவு 7 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் முதல் டி-20 போட்டியில் மோத உள்ளனர். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதனால் வேறு வழியின்றி முதலில் களமிறங்க போகிறது இந்திய. டாஸ்-க்கு பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “ஒரு நாட்டின் கேப்டனாக விளையாடுவது சிறப்பாக தான் இருக்கும், அதுமட்டுமின்றி ஆச்சரியமாகவும் தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த முறை அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.”

“இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்தால் தான் போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இருந்தாலும் இப்பொழுது வேறு வழியில்லை, கடினமாக விளையாடி அதிக ரன்களை அடிக்க வேண்டும். எங்கள் அணியில் யார் புதிதாக இடப்பெற்றாலும், அவர்களுக்கு முழுமையான நம்பிக்கையை கொடுப்போம். இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதனால் அர்ஷதீப் சிங் இன்றைய போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

என்னது அர்ஷதீப் சிங் இல்லையா ?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார் அர்ஷதீப் சிங். டி-20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் பும்ரா இல்லாத இடத்தை இவர் (அர்ஷதீப் சிங்) பூர்த்தி செய்தார். ஆனால் இவர் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இல்லாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here