திரும்ப வந்துட்டேனு சொல்லு ; நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் இவர் தான் ;

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் இன்று முதல் தொடங்க இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

பல நாள் தொடரும் இந்திய அணியின் முக்கியமான வீக்னஸ் :

இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டால் இந்திய அணிக்கு தோல்வி தான் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதன் உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில்பும்ரா, தீபக் சஹார் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இந்தியானிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு திரும்பிய முன்னணி பவுலர் :

கடந்த செப்டம்பர் மாதம் காயத்தில் இருந்து வெளியேறிய பும்ராவிற்கு மீண்டும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் காயம் ஏற்பட்டது. அதனால் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், பெங்களூரில் உள்ள NCA -ல் தீவிரமான தீவிரமான சிகிச்சையில் இருந்தார் பும்ரா.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட போகிறார். அதனால் அவரது வருகை நிச்சியமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.