வருகின்ற 29ஆம் அன்று ஐபிஎல் 2022யின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. நேற்று நடந்த முதல் Qualifier போட்டியில் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி , ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஐபிஎல் 2022 போட்டிகள் முடிந்த சில நாட்களில் தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்துஹ் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர். ஜூன் 9ஆம் தேதி அன்று முதல் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.
18-member #TeamIndia squad for the upcoming five-match Paytm T20I home series against South Africa.#INDvSA @Paytm pic.twitter.com/tK90uEcMov
— BCCI (@BCCI) May 22, 2022
இந்த முறை அனுபவம் மற்றும் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி இந்த முறை ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இந்திய அணியை வழிநடத்த கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.
இருப்பினும் சில முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை என்று பல கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவனுக்கு ஏன் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கொடுக்கவில்லை ? ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக தான விளையாடியுள்ளார் என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிசிசிஐ உறுப்பினர் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதில் ” இந்த முறை ஐபிஎல் 2022 போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதனால் அவர்களுக்கு நிச்சியமாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேண்டும்.”
அதனால் ஷிகர் தவானிடம் ; இந்த முறை நீ இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட். இதனை கேட்டபோது கஷ்டமாக தான் இருந்தது, ஆனால் பிசிசிஐ உறுப்பினர்கள் அனைவரும் இதனை ஒப்புக்கொண்டோம். அதுமட்டுமின்றி இந்திய அணியை அறிவிக்கும் முன்பே இது நடந்து முடிந்தது என்று கூறியுள்ளார் பிசிசிஐ உறுப்பினர்.
கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க..! ஷிகர் தவானின் பங்களிப்பு இதற்குமேல் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவைப்படுமா ?? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!