ரொம்ப கஷ்டமாக தான் உள்ளது ; தோல்விக்கு இவர்கள் தான் காரணம் ; சஞ்சு சாம்சன் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022: ஐபிஎல் டி-20 2022 கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தான் லீக் போட்டிகள் அனைத்து முடிந்த நிலையில் நேற்று முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற தொடங்கியுள்ளது.

நேற்று இரவு நடந்த முதல் Qualifier சுற்றில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்…!

அதன்படி வேறு வழியில்லாமல் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் வெறும் 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 188 ரன்களை அடித்தனர்.

அதில் ஜெய்ஸ்வால் 3, பட்லர் 89, சஞ்சு சாம்சன் 47, படிக்கல் 28, ஹெட்மயர் 4 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ஜெய்ஸ்வால் போலவே தொடக்க வீரரான சஹா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய சுமன் கில், வெட், ஹார்டிக் பாண்டிய மற்றும் டேவிட் மில்லரின் அதிரையடன ஆட்டத்தால் 191 ரன்களை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதனால் குஜராத் அணி இப்பொழுது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் கூறுகையில் ; “இந்த ரன்களை அடித்தது மிகவும் நல்லதாக தான் தெரிகிறது. அவர்கள் பவுலிங் செய்ததில் பல ஸ்விங் பவுலிங் இருந்தது. இருப்பினும் நாங்கள் முடிந்த வரை நல்ல ரன்களை அடித்துள்ளோம்.”

“இருப்பினும் அவர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதுவும் இவர்களை போன்ற பவுலிங்கில், இந்த சூழ்நிலையில் 188 ரன்களை அடித்தது மிகவும் சிறப்பான விஷயம் தான். எங்கள் அணியில் , அதுவும் ப்ளேயிங் 11ல் இருக்கும் ஐந்து வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்.”

“எனக்கு தெரிந்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக தான் விளையாடி வந்துள்ளோம். இருப்பினும் சின்ன சின்ன தவறால் தான் தோல்விகள் வருகின்றனர். அதனால் நிச்சியமாக நாங்கள் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்போம் என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.”