சூரியகுமார் யாதவ் இல்லை ; WTC போட்டியில் பிசிசிஐ களமிறங்கிய முக்கிய வீரர் ; ஆஸ்திரேலியா அணிக்கு ஆப்பு உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் போட்டிக்கான தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான தொடர் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோத உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க போகும் இந்திய கிரிக்கெட் அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், முகமத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனட்கட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் விவரம் :

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலந்து, அலெக்ஸ் காரே, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஹேசல்வுட், ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், உஸ்மான் கவாஜா, மரன்ஸ் லபுஸ்சாக்னே, நாதன் லியொன், மிட்சேல் மார்ஷ், டோட் முரபி, மாத்தியூ ரென்சஹாவ், மிட்சேல் ஸ்டார்க், டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த கூடுதல் பலம் :

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பலமான மாறி வருகிறது பேட்டிங் லைன். ஆமாம், அதிரடியாக சிறப்பாகவும் விளையாடி வருகிறது இந்திய. இருப்பினும் ஐசிசி கோப்பையில் மட்டும் தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

ஆமாம், பல ஆண்டுகளாவே ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய. அதுமட்டுமின்றி, கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய. ஆனால் நியூஸிலாந்து அணியை வெல்ல முடியாமல் மீண்டும் தோல்வி பெற்றது. அதனால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது பிசிசிஐ.

சரியான நேரத்தில் சரியான வீரரை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. ஆமாம், ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வருகிறார் ரஹானே. மிடில் ஆர்டர் வலுவாக இருக்க ரஹானேவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய ரஹானே 209 ரன்களை அடித்துள்ளார். அதனால் யாரும் எதிர்பாராத வகையில் ரஹானேவிற்கு மீண்டும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அணிக்கு சிறப்பான மிடில் ஆர்டர் அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

புஜாரா, ரஹானே, விராட்கோலி போன்ற மூவரின் பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே இறுதியாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின்னர் 1 வருடம் கழித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.