BGT : இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர்.
இரு டெஸ்ட் போட்டியின் சுருக்கம் :
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சரியா எ பேட்டிங் அமையவில்லை. அதனால் முதல் டெஸ்ட் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது.
ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் மோசமான நிலையில் விளையாடியதால் 6 விக்கெட்டை வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளனர்.
தீடிரென்று கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியுள்ளனர் :
இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் பற்றிய சர்ச்சை எழுந்து கொண்டே தான் இருக்கிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருக்கும் வீரர்கள் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாட வேண்டிய வீரராக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த முறை அப்படி இல்லை, டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல் மோசமான நிலையில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதனால் ரசிகர்கள் இடையே எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் இடம்பெற வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். துணை கேப்டனாக இருந்தால் கே.எல்.ராகுலை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. அதனால் முதலில் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை வெளியேற்றியுள்ளனர்.
சமீப காலமாகவே கே.எல்.ராகுலின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வரும் கே.எல்.ராகுலுக்கு மட்டும் ஏன் ? தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.
திறமையான வீரர்கள் பலர் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும்பட்சத்தில் ஏன் ? இந்திய கிரிக்கெட் அணி இப்படி செய்கிறது ? கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பது சரியா ? தவறா ?