அடுத்த டெஸ்ட் போட்டியில் இவருக்கு நிச்சியமாக அணியில் இடமில்லை ; ரசிகர்கள் மகிழ்ச்சி ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரில் முன்னிலையில் இருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் தொடர்ந்து நடைபெற்று வரும் பெரும் பிரச்சனை :

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி சொதப்பி வருகிறது. ஆமாம், இதுவரை இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் மாறி மாறி விளையாடி வருகின்றனர்.

அப்படி இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடரில் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை தொடக்க வீரர்களாக கொண்டு விளையாடி வருகின்றனர்.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையாமல் இந்திய கிரிக்கெட் அணி திணறிக்கொண்டு வருகிறது. ஆமாம், அதிலும் குறிப்பாக கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடிய கே.எல்.ராகுல் விளையாடியதால் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்ப்புகள் எழுந்தது.

அதனால், மார்ச் 1ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தொடரில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கே.எல்.ராகுலை காட்டிலும் சுப்மன் கில் இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துள்ளார். ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் பார்ட்னெர்ஷிப் செய்தால் சிறப்பான தொடக்க ஆட்டம் அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் விளையாட வேண்டுமா ? அல்லது இளம் வீரர் சுப்மன் கில் விளையாட வேண்டுமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here