இன்னும் போட்டியே தொடங்களா ; ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேறிய வீரர் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி தொடரை வென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான தொடர் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, யுஸ்வேந்திர சஹால், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, விராட்கோலி, குல்தீப் யாதவ், முகமத் ஷமி, முகமத் சிராஜ், ஹர்டிக் பாண்டிய, அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், சுப்மன் கில்,ஷர்டுல் தாகூர், உம்ரன் மலிக், ஜெயதேவ் உனட்கட், வாஷிங்டன் சுந்தர், சூரியகுமார் யாதவ்.

டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணியின் இருந்து வெளியேறிய மிடில் ஆர்டர் ஒருநாள் போட்டியில் இருந்தும் விலகல் :

டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்த போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாட முடியாத நிலையில் வெளியேறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள ஐபிஎல் 2023 போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் சில போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா , விராட்கோலி போன்ற வீரர்கள் அணியில் இருப்பதால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

டெஸ்ட் போட்டியில் தொடரை வென்றது போல ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுமா இந்திய கிரிக்கெட் அணி ?