ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இவரை விக்கெட் கீப்பராக அறிவிக்கலாம் ; முன்னாள் வீரர் ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான பயிற்சிகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து வீரர்களும் அவரவர் அணிகளில் இணைந்து கொண்டு பயிற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆமாம், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் -க்கு இரு மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஏற்பட்டது. அதனால் குறைந்தது 18 மாதங்கள் விளையாட வாய்ப்பு கிடையாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது 2023 மட்டுமின்றி 2024ஆம் ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத நிலையில் டெல்லி அணி தவித்து வருகிறார். அதிரடியாக விளையாடும் ரிஷாப் பண்ட் -க்கு சரிசமமான வீரர் கிடைப்பது கடினம் தான்.

அதுமட்டுமின்றி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் ? அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்று கேள்விகள் எழுந்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமத் கைப் கூறுகையில் :

“நான் ரிஷாப் பண்ட் -யிடம் பேசினேன். அவர் விரைவாக குணமடைய அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறார். இப்பொழுது அவர் நன்கு இருக்கிறார். அவருக்கு இப்படி நடக்கும் என்று சத்தியமாக யாருமே எதிர்பாராத ஒன்று. ஆனால் தைரியமான வீரர். அதனால் விரைவாக இந்திய அணிக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.”

“இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணியிக்கு இருக்கும் ஒரே வீரர் சர்ப்ரஸ் கான் தான் விக்கெட் கீப்பராக விளையாட முடியும். ஏனென்றால், இவர் நல்ல பேட்ஸ்மேன் தான். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். என்னதான் இருந்தாலும் ரிஷாப் பண்ட் -ஐ போல ஒரு வீரரை தேர்வு செய்வது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார் கைப்.”

ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக யாரை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் ? இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு சாதகமாக அமையுமா ? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here