இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியை காட்டிலும் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.


அந்த முடிவை எதிர்பார்த்து இந்தியதா கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர்…! ஆமாம், அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? முழு விவரம் கீழே :
இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்து அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி-20 போட்டிக்கான தொடரிலும் விளையாட உள்ளனர். இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது.
அதில், டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணிக்கு சிறப்பான பேட்டிங் அமைந்தது. அதனால் 32.4 ஓவர் முடிவில் 355 ரன்களை அடித்தனர்.


பின்பு பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 373 ரன்களை விளாசினர். அதில் அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 102 ரன்களை அடித்துள்ளனர். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இலங்கை அணி 302 ரன்களை அடித்தனர்.
அதனால் 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. போட்டியை எப்படியாவது ட்ரா செய்ய வேண்டுமென்று இலங்கை அணியும், வெற்றி பெற வேண்டுமென்று நியூஸிலாந்து அணி மோதி கொண்டனர்.


தொடக்க ஆட்டம் நியூஸிலாந்து அணிக்கு பெரிய அளவில் ஏற்படவில்லை. தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்த நியூஸிலாந்து அணி தோல்வி தான் பெரும் என்று நினைத்தார். ஆனால் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் 121* மற்றும் டேரில் மிட்சேல் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை விளாசினார்கள்.
அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. அதுமட்டுமன்றி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது நியூஸிலாந்து.
இதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன லாபம் :


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது சுற்றில் இந்திய அணி நிச்சியமாக வெல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தொடரில் இலங்கை அணி தோல்வி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தன.
அதற்கு ஏற்ப நியூஸிலாந்து அணி கடினமாக விளையாடி வெற்றியை கைப்பற்றியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய.