மெகா ஏலத்தில் விலை போகாத வீரர் இன்று அணியை இறுதி போட்டிக்கு முன்னேற்றி கொண்டு சென்றுள்ளார் ; யார் தெரியுமா ?

0

ஐபிஎல் ;

கடந்த மார்ச் 2008ஆம் அன்று இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசன் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் 2022:

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை லீக் போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த முதல் Qualifier போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குஜராத்.

ஐபிஎல் 2022 ஏலம் :

கடந்த ஆண்டு இறுதியில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்தது பிசிசிஐ (குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்) போன்ற இரு அணிகள் தான். அதனால் இந்த முறை மெகா ஏலம் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதனால் மற்ற அணிகளை அதிகபட்சமாக நான்கு வீரரை மட்டுமே கைப்பற்ற முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த டேவிட் மில்லர் அணியில் தக்கவைக்க படவில்லை. அவரை அணியில் இருந்து வெளியேற்றியது ராஜஸ்தான். பின்னர் முதல் சுற்று ஏலத்தில் டேவிட் மில்லர் பெயர் சொன்ன போது ஒரு அணி கூட அவரை கைப்பற்ற முன்வரவில்லை.

பின்னர் இரண்டாவது மற்றும் இறுதி சுற்று ஏலத்தில் 1 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக டேவிட் மில்லர் திகழ்கிறார்.

நேற்று நடந்த முதல் Qualifier சுற்றில் கூட டேவிட் மில்லர் 38 பந்தில் 68 ரன்களை விளாசியுள்ளார், அதுவும் ஆட்டம் இழக்காமல். 15 போட்டிகளில் விளையாடி மில்லர் 449 ரன்களையும் அதிகபட்சமாக ஆட்டம் இழக்காமல் 94 ரன்களை அடித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களே..! இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரர் சிறந்த ஆட்டத்தை விளையாடியது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here